Saturday, June 19, 2004


வேறொரு மழை நாள் - மனுஷ்ய புத்திரன்

நண்பர் ஹமீதிடம் ( கவிஞர் மனுஷ்ய புத்திரன்) என் வலைப்பதிவை பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.
"வாரம் ஒரு முறை எழுதுவதற்கு நிறைய படிக்க வேண்டியிருக்கிறது, அதனால் இந்த வாரம் என் வலைப்பதிவில் போடுவதற்கு ஒன்றுமில்லை"
"இரண்டு நாள் முன் எழுதிய கவிதை என்னிடம் இருக்கிறது எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார்.
"கவிதை பற்றி ஒரு சிறு குறிப்பு கொடுத்தால் என் போன்றவர்கள் உம்மாச்சிக்கு தேங்காய் உடைப்பார்கள்"
உடனே ஒரு குறிப்பையும் எழுதி கொடுத்தார்.
இந்த வாரம் மனுஷ்ய புத்திரனின் 'வேறொரு மழை நாள்' என் வலைப்பதிவில் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.

வேறொரு மழை நாள்

சட்டென வந்து சேர்ந்துவிட்டது
இக்கோடை மழை

நாளெல்லாம் காயவைத்த துணியை
பதைபதைக்கச் சேகரிக்கிறாள்

ஈரத்துணிகள்
ஈரவாடையை கூட்டியபடி
வீடெங்கும் பரவுகின்றன

பிள்ளைகள் நனைந்துகொண்டே
வீடு திரும்புகிறார்கள்.

தலைகளைத் துவட்டி உலர்த்தி
டை மாற்றுகிறாள்.

கட்டிகிடக்கும் நாய் மழையை
அண்ணாந்து பார்க்கிறது


அவள் சங்கிலியை விடுவித்ததும்
அவளை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள்
ஓடிவருகிறது

காங்க்ரீட் கூரையிலிருந்து
கொட்டும் மழைநீரை வீணாக்க மனமில்லாமல்
குடங்களை எடுத்துவைக்கிறாள்.
குடங்கள் நிரம்பித் தண்ணீர் வழிந்தோடுகிறது

போன மழைக்கு ஒழுகிய இடத்தைப் பார்க்கிறாள்
இல்லை அதில் எந்தக் கசிவும் இல்லை

சாரல் படரத் தொடங்குகிறது
ஜன்னல்களை மூடுகிறாள்
கண்ணாடியில் மழை பெய்துகொண்டே இருக்கிறது

இனி மழையிடம் செய்வதற்கு
ஒன்றுமேயில்லை.

வாசலில் வந்து நின்று மழையை
அதன் முடிவற்ற தனிமையின் வழியே
பார்த்துக்கொண்டே நிற்கிறாள்

எங்கிருந்தோ ஒரு மெல்லிய சூறைக்காற்று
அவளது முகத்தில்
காதுகளில்
அடிவயிற்றில்
எல்லா இடத்திலும்
ஈரத்தைக்கொண்டு வருகிறது

சட்டென ஏதோ ஒரு காலத்தில்
ஒரு வயல் வரப்பில்
திடீரென வந்துவிட்ட மழையில் நனைந்தபடி
வீட்டிற்கு ஓடும் சிறுமியின் முகமாக மாறுகிறது
அவளது முகம்

இந்த மழை
இப்போதைக்கு நிற்காது என்று யாரோ சொல்கிறார்கள்

- மனுஷ்ய புத்திரன்
மழை நம்முடைய இறுகிப்போன அன்றாட வாழ்வில் ஒரு குறுக்கீடு. நம் பரபரப்புகளுக்கு இடையே திடீர் மழை ஏற்படுத்தும் செயலின்மைதான் மழை தரும் ஆனந்தங்களிலேயே மிகவும் முக்கியமானது. மழை வந்துவிட்டால் நம்முடைய ஒழுங்குகளை ஏற்பாடுகளை சற்றே உடனடியாக மாற்ற வேண்டியிருக்கிறது. இந்தக் கவிதையில் நிகழ்வது எவ்வாறு மழை அதற்கான செயல்களை தூண்டுகிறது என்பதுதான். ஆனால் கவிதையின் மைய அனுபவம் அதைத் தாண்டியது. இந்த ஏற்பாடுகள் முடிந்தபிறகு திடீரென செய்வதற்கு ஏதுமில்லாமல் மழையும் நாமும் மட்டும் இருக்கிறோம். இப்போது தற்போதைய வாழ்நிலையின் எல்லா இறுக்கங்களும் கலைந்து ஏதோ ஒரு வயல் வெளியில் மழியில் நனைந்தபடி வீடு திரும்பும் சிறுமியாக தன்னை இக்கவிதையின் பாத்திரம் உணர்கிறது. இது தன்னைத் தானே கடக்கும் ஒரு நிலை.

வேறொரு மழை நாள் - மனுஷ்ய புத்திரன் பிடிச்சிருக்கா ? பிடித்திருந்தால் '+' பிடிக்காவிட்டால் '-' என்று ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து மற்றவருக்கு படிக்கவோ படிக்காமலிருக்கவோ உதவுங்கள். பரிந்துரைக்க Starsயை கிளிக் பண்ணுங்க..நன்றி!

Difficulty in reading this post due to font issues? Click here for a PDF copy. Works best if you right-click and select 'Save as'
 

Links: Site Feed | | தேசிகன் பக்கம் | பாலாஜி | Early Days

Powered by:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet ::
 தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

This page is powered by Blogger. Isn't yours? Who Links Here இயற்பியல்::2005, இயற்பியல் ஆண்டிற்கான தமிழ் இணையதளம்
எனது முதல் பதிவுசுஜாதாவும் நானும்ஸ்ரீரங்கம் - 1 என் பேர் ஆண்டாள் ஸ்ரீரங்கம் - 2அனுபவத்தின் அனுபவம்வேறொரு மழை நாள்ஸ்ரீரங்கம் - 3ஸ்ரீரங்கம் - 4SRI NATHAMUNIவின்னி பாதாள வழிஸ்ரீரங்கம் - 5பூபி, பாபிMemories of Dr.TSS Rajan(by GR)Down Memory Lane - Sujathaகீச் கீச்SCIENCE FICTION - Another tomorrow சிறுத்தையை நெருங்குதல்பெண்களூர் *பெண்களூர் - 2விஞ்ஞான சிறுகதை - முடிவுவி.சிறுகதை கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் சுஜாதாவி.சிறுகதை பதில்கள் - சுஜாதா அப்பாவின் ரேடியோ Guest Blog - ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பானை மேல்kind சர்வே! சுஜாதாவின் படைப்புகள் Guest Blog - ஹதராபாத் இந்த மார்கழி.. ஆண்டாள் ஓர் அறிமுகம்! திருப்பாவை தனியன்கள் திருப்பாவை - 1 திருப்பாவை - 2 திருப்பாவை - 3 திருப்பாவை - 4 திருப்பாவை - 5 திருப்பாவை - 6 திருப்பாவை - 7 திருப்பாவை - 8 திருப்பாவை - 9 திருப்பாவை - 10 திருப்பாவை - 11 திருப்பாவை - 12 திருப்பாவை - 13 திருப்பாவை - 14 திருப்பாவை - 15 திருப்பாவை - 16 திருப்பாவை - 17 திருப்பாவை - 18 திருப்பாவை - 19 திருப்பாவை - 20 திருப்பாவை - 21 திருப்பாவை - 22 திருப்பாவை - 23 திருப்பாவை - 24 திருப்பாவை - 25 திருப்பாவை - 26 திருப்பாவை - 27 திருப்பாவை - 28 திருப்பாவை - 29 திருப்பாவை - 30 திருப்பாவை - சிறப்பு திருப்பாவை - முடிவுரைபெண்களூர் - 3City Tourஏஞ்சல் அனாமிகாபெண்களூர் - 4அது அந்தக் காலம்ரயில் பிரயாணத்தின் கதைஏ.கே.ராமானுஜம் ஓர் அறிமுகம்பெண்களூர் - 5மு.ராமசாமி + அ.ராமசாமி = ஈ.வெ.ராமசாமிபெரியார் & ©அனாமிகா,சிறுகதை சுஜாதாவிடைபெறுதல்தேவதைக் கிறுக்கல்கள்...நேர்காணல்-மனுஷ்ய புத்திரன்எண்ணெய்க் குளிப் படலம்ஆஸ்ட்ரிக்ஸ்நானும் ஒரு டஜன் பெண்களும்GPS - Global Positioning Systemஎன் பேர் ஆண்டாள் - 2Blog, Email, Phone, SMSஅட நாம இப்படித்தான்திருமெய்யம்தசாவதாரம் - தி மிஸ்ஸிங் லிங்க்கிரிமினல்கள் ஜாக்கிரதைஹாப்பி பர்த்டே சுஜாதா !ஹாப்பி பர்த்டே சுஜாதா ! - Follow-upவேதாளம்'s Day Outபணம் காசின் பரிணாமம்லொஸ்கு